Theme Check

சிறந்த திருநங்கை இவர்தான்.. விருது வழங்கி சிறப்பித்தார் முதல்வர்..!

சிறந்த திருநங்கை இவர்தான்.. விருது வழங்கி சிறப்பித்தார் முதல்வர்..!

சிறந்த திருநங்கை இவர்தான்.. விருது வழங்கி சிறப்பித்தார் முதல்வர்..!
X

2022-ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதை மர்லிமாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவரை சிறப்பிக்கும் வகையில் 2022-ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு வழங்கினார்.

அவரது 25 ஆண்டுகால சேவையைப் பாராட்டி, விருதுக்கான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிழையும் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஷம்பு கல்லோலிகர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் த.ரத்னா, மாநில திட்டக் குழு உறுப்பினர் டாக்டர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it