Theme Check

விராட் கோலிக்கு இதுதான் பிறந்தநாள் பரிசு.. இந்தியா பந்துவீச்சு தேர்வு !!

விராட் கோலிக்கு இதுதான் பிறந்தநாள் பரிசு.. இந்தியா பந்துவீச்சு தேர்வு !!

விராட் கோலிக்கு இதுதான் பிறந்தநாள் பரிசு.. இந்தியா பந்துவீச்சு தேர்வு !!
X

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த தொடரில் இந்திய அணி முதல்முறையாக டாஸ் வென்றுள்ளது. விராட் கோலியின் பிறந்தநாள் பரிசாக அவர் டாஸ் வென்றுள்ளளதாக சமூக வலைதளங்களில் பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 2016 மற்றும் 2021 என இரண்டு டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா தொடர்ச்சியாக ஆறு முறை டாஸை இழந்திருந்தது. இந்த போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வருண் சக்ரவர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
india
ஆடும் லெவன் விவரம்...

ஸ்காட்லாந்து:

ஜார்ஜ் முன்சி, கைல் கோட்ஸர் (கேப்டன்), மேத்யூ கிராஸ் (விக்கெட் கீப்பர்), ரிச்சி பெரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீப், அலஸ்டெய்ர் எவன்ஸ், பிராட்லி வீல்.

இந்தியா:
கே.எல். ராகுல், ரோகித் ஷர்மா, விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

newstm.in

Tags:
Next Story
Share it