சரக்கடித்தாலும் இப்படியா?... சந்தையில் வடமாநில இளைஞரின் செயலை கண்டு அலறிய மக்கள்!!
சரக்கடித்தாலும் இப்படியா?... சந்தையில் வடமாநில இளைஞரின் செயலை கண்டு அலறிய மக்கள்!!

சந்தையில் கடை ஒன்றில் கத்திவாங்கி வடமாநில இளைஞர் தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்ட சம்பவத்தை கண்ட மக்கள் அலறினர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றி உள்ள எஸ்டேட் பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்கே வேலை செய்வதற்காக வடமாநிலத்து இளைஞர்கள் அதிகமாக வருகின்றனர். இந்நிலையில் அங்கு வாரச் சந்தையில் கடை ஒன்றில் கத்தி வாங்கிய இளைஞர் தன்னைத்தானே குத்திக்கொண்டார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை அழைத்துச்சென்று அங்கிருந்த ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த இளைஞர், கடையொன்றில் கத்தியை வாங்கியுள்ளார். பின்னர் அந்த கத்தியை மூன்றுமுறை தனது வயிற்றில் அந்த நபர் குத்திப்பார்த்துள்ளார். குடிபோதையில் இருந்த அந்த இளைஞர், தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டுள்ளது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து சாலையோர கடைகளில் கத்திபோன்ற ஆயுதங்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளதாக வால்பாறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயம் அடைந்தவர் பெயர் கோபால் பங்கட் என்பதும் அவர் வால்பாறை அருகில் உள்ள சோலையர் எஸ்டேட் பகுதியில் தோட்ட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு வால்பாறை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
newstm.in


