இதுதான் செம சான்ஸ்... தங்கத்தின் விலை ரூ.760 குறைந்தது !!
இதுதான் செம சான்ஸ்... தங்கத்தின் விலை ரூ.760 குறைந்தது !!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
ஜூன் 1ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளான ஜூன் 2ஆம் தேதி தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இதனால் தங்கம் வாங்குவோர் கவலையில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளது. அதாவது, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனையாகிறது.

அதன்படி சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையாகிறது. இதனால், இன்று தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், ஒரு கிலோ வெள்ளி 1300 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 66 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
newstm.in

