இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை.. மாரிதாஸ் கைதுக்கு அண்ணாமலை கண்டனம் !
இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை.. மாரிதாஸ் கைதுக்கு அண்ணாமலை கண்டனம் !

யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர்களில் ஒருவர் மாரிதாஸ். மதுரையைச் சேர்ந்த இவர் வலதுசாரி சிந்தனையுடன் செயல்பட்டு வீடியோக்கள் வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சில நேரங்களில் வெளியீடும் வீடியோக்களில் புள்ளிவிவரங்களில் தோல்வியடைந்து பல்பு வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் தனது யூடியூப் சேனலில் திமுகவை கடுமையாக விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார் மாரிதாஸ்.
இந்த நிலையில், அண்மையில் முதுகுளத்தூரில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் என்ற இளைஞர் மறுநாள் வீட்டில் உயிரிழந்தார். இதில் போலீசார் தாக்கியதாக குடும்பத்தினரும், தாக்கவில்லை என போலீசாரும் கூறி வருகின்றனர். மாணவர் மணிகண்டன் இறப்பு விவகாரம் குறித்து யூடியூபர் மாரிதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இன்று காலை அவருடைய டிவிட்டர் பக்கத்தில், திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா. தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும், சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.
மாரிதாஸ் பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர் அதை தனது பக்கத்தில் இருந்து நீக்கினார். இந்நிலையில், மதுரை புதூர் காவல்நிலைய போலீசார், 153 A, 505 ஆகிய பிரிவுகளில் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்தல், அரசு உயர் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் பதிவிடுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.
இதற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மதுரையில் மாரிதாஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்! ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை. ஒருபக்கம் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ஏவல் படையை தயார் செய்தும், இன்னொருபக்கம் தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது! இந்த கபட நாடகத்தை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது, என்று கூறியுள்ளார்.
மதுரையில் மாரிதாஸ் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்!
— K.Annamalai (@annamalai_k) December 9, 2021
ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
1/2
newstm.in

