Theme Check

இதுவே முதன்முறை.. பிரியங்கா காந்தியால் தமிழக காங். தொண்டர்கள் உற்சாகம் !!

இதுவே முதன்முறை.. பிரியங்கா காந்தியால் தமிழக காங். தொண்டர்கள் உற்சாகம் !!

இதுவே முதன்முறை.. பிரியங்கா காந்தியால் தமிழக காங். தொண்டர்கள் உற்சாகம் !!
X

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரக்காலம் கூட இல்லை. இந்த நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சார்பிலும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பிரச்சாம் செய்து வருகிறது.

இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் தேசிய தலைவர்கள் தமிழகத்தில் முற்றுகையிட உள்ளனர். வரும் ஏப்ரல் 2ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, அதிமுக - பாஜக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். அவர் இரு இடங்களில் பிரச்சாரத்தில் கூட்டத்தில் பேச உள்ளார். இதேபோல் மத்திய அமைச்சர்கள், தேசிய நிர்வாகிகளும் தமிழக வரவுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி 4ஆம் கட்டமாக சேலத்திற்கு வரும் 28 ஆம் தேதி வருகிறார். அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், பிரியங்கா காந்தி தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரியங்கா காந்தி, ராகுல்காந்திக்கு முந்தைய நாள் வரும் 27 ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளார். அவர் கன்னியாகுமரியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது வருகை காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரியங்கா காந்தி தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரமாக முதன்முறையாக வரவுள்ளார். இதுவே காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுக்க காரணமாக உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it