Theme Check

அகமதாபாத் அணியின் பெயர் இதுதான்.. அறிவித்தது அணியின் நிர்வாகம்..!

அகமதாபாத் அணியின் பெயர் இதுதான்.. அறிவித்தது அணியின் நிர்வாகம்..!

அகமதாபாத் அணியின் பெயர் இதுதான்.. அறிவித்தது அணியின் நிர்வாகம்..!
X

கடந்த ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்று வந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள் களமிறங்குகிறது.

இதனைத்தொடர்ந்து நடப்பாண்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளதால், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் 2 முதல் 4 வீரர்கள் வரை தக்க வைத்து, மற்ற வீரர்களை ஏலத்தில் விட்டது. பின்னர் புதிதாக சேர்க்கப்பட்ட அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்கள் தக்கவைப்பு வீரர்களை அறிவித்தது.

இந்நிலையில், அகமதாபாத்தை மையமாகக் கொண்ட ஐபிஎல் அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அணியில் இந்திய சர்வதேச ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆப்கானிஸ்தான் சர்வதேச சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் மற்றும் இந்திய இளம் தொடக்க வீரர் ஷுப்மான் கில் ஆகியோரை வாங்குவதாக டைட்டன்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
Ahmedabad IPL team to be called Gujarat Titans | Sports News,The Indian  Express
மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு, தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஆசிஷ் நெக்ரா நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் முதலீட்டு நிறுவனமான சிவிசி கேப்பிடல் பார்ட்னர் ரூ.5,635 கோடி முதலீட்டில் அகமதாபாத் அணியை வாங்கியுள்ளது.

‘குஜராத் டைட்டன்ஸ்’ பெயர் காரணம் குறித்து தெரிவித்துள்ள அணி நிர்வாகம், குஜராத் மாநிலத்தின் கிரிக்கெட் பாரம்பரியத்தை போற்றும் வகையில் இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. வரும் 12 மற்றும் 13-ம் தேதிகளில் பெங்களூருவில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது.
Next Story
Share it