Theme Check

இது அடுத்த குண்டு.. சிலிண்டர் விலை 200 ரூபாய் உயர்வு?

இது அடுத்த குண்டு.. சிலிண்டர் விலை 200 ரூபாய் உயர்வு?

இது அடுத்த குண்டு.. சிலிண்டர் விலை 200 ரூபாய் உயர்வு?
X

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போராட்டம் காரணமாக இரு நாடுகளும் பெரியளவில் இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. உக்ரைன், உள்நாட்டு கட்டமைப்பு, ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உயிர்களை பலிகொடுத்து வருகிறது. ஆனால், ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. அதேபோல் பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகிறது.

ukraine ukraine

அதேநேரத்தில், உலகம் முழுவரும் பொருளாதாரத்தை உக்ரைன் - ரஷ்யா போர் ஆட்டம் காணச்செய்து வருகிறது. இந்தியாவில் பொருளாதார ரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி அச்சுறுத்தும் நிலையில், மேலும் விலை உயர்த்தப்பட்டால் அது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். மதிப்பீடுகளின் படி பெட்ரோல் விலை 15 ரூபாய் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு பக்கம் சமையல் சிலிண்டர் விலையும் அதிரடியாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் சமையல் சிலிண்டர் விலை உயரும் என்று தெரிகிறது. சிலிண்டர் விலை 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயரும் எனவும், மார்ச் மாதம் முடிந்ததும் இந்த விலையேற்றம் அமலுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ukraine
இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலையேற்றத்தால் எண்ணெய் விநியோக நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கத்தை பொதுமக்கள் மீது சுமத்தும் வகையில் விலையேற்றம் தொடர்பான அறிவிப்பை நிறுவனங்கள் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படும். கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. ஆனால் ஏப்ரல் 1ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it