கோப்பையை தவறவிட்ட இந்தியா - தோல்விக்கு இவர்தான் காரணம்!
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் அடித்தது. அந்த அணியின் ஹீலே 75 ரன்களும், மோனே 78 ரன்களும் எடுத்து அசத்தினர். 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 85 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் அடித்தது. அந்த அணியின் ஹீலே 75 ரன்களும், மோனே 78 ரன்களும் எடுத்து அசத்தினர். 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 18 ரன்களில் இந்தியா முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷபாலி இரண்டு ரன் மட்டுமே எடுத்தார். ஸ்மிருதி மந்தனா 11 ரன்களிலும், தன்யா பாட்டியா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நம்பிக்கை நட்சத்திரம் ஜெமிமா ரன் எதுவும் எடுக்கவில்லை. அடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 19.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் இந்த தொடரில் எந்த போட்டியிலும் சரியாக விளையாட வில்லை. அணியில் முக்கிய பொறுப்பு வகிக்க வேண்டிய கேப்டன் தொடர்ந்து சோபிக்காததே பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
newstm.in

