Theme Check

பெட்ரோல் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.. மத்திய அரசு அல்ல.. ஜி.கே. வாசன் !

பெட்ரோல் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.. மத்திய அரசு அல்ல.. ஜி.கே. வாசன் !

பெட்ரோல் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.. மத்திய அரசு அல்ல.. ஜி.கே. வாசன் !
X

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. இதனுடைய தாக்கம் போரின் அடைப்படையில் என்றாலும் கூட பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது.

வருகின்ற நாட்களில் இது குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க கூடிய நிலையை, மத்திய அரசு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். விலை உயர்வு என்பது சர்வதேச பிரச்சனை. இது போரின் அடிப்படையில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, என்றார்.

GK_Vasan_EPS

மேலும், மத்திய அரசைப் பொருத்தவரை மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் தமிழக மக்களின் தேவைகளை படிப்படியாக பூர்த்தி செய்யும் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். இலங்கையில் வசித்து வரும் தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களுக்கு தேவைக்கேற்ப முதலில் உதவி செய்தது இந்திய அரசாக தான் இருக்க முடியும். இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பல நேரங்களில் இது தொடர்கதையாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய உறுதியான நிலையை மத்திய வெளியுறவுத்துறை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசிடம் உறுதியோடு பேசி அவர்கள் அச்சமின்றி கடலுக்கு சென்று தங்களின் வாழ்வாதாரம் தொடர மத்திய அரசு துணை நிற்க வேண்டும். அத்தகைய பணியை மத்திய அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது, என்று ஜி.கே. வாசன் கூறினார்.

newstm.in

Next Story
Share it