Theme Check

இந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த WHO !

இந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த WHO !

இந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த WHO !
X

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு நாடுகள் கட்டுப்படுத்தினாலும் கொரோனா பாதிப்பை முழுமையாக தடுத்திடவில்லை. கொரோனா பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு அவ்வப்போது முக்கிய தகவல்களை வெளியிட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதி அளித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது. தற்போது கொரோனா இந்தியாவில் இந்த அளவுக்கு பரவியது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பி.1.617 உருமாற்ற கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவில் இந்த வகை வைரஸ் மீண்டும் பரவி வருவதும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பி.1.1.7 உள்ளிட்ட இதர கொரோனா வைரஸ் வகைகளும் இந்தியாவில் பரவி வருகின்றன.
உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 0.1 சதவீத மாதிரிகள் மட்டுமே மரபணு உருமாற்ற பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் இறுதியில் பி.1.617.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது கண்டு பிடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதம் பேர் இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதே போல பி.1.167.2 என்ற வைரசும் பரவி வருகிறது. இந்த வைரசால் 7 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 95 சதவீத பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த பிராந்தியத்தின் உயிரிழப்பில் இந்தியாவில் மட்டும் 93 சதவீதம் பதிவாகி உள்ளது. சர்வதேச கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியாவில் 50 சதவீத தொற்றும் சர்வதேச உயிரிழப்பில் இந்தியாவில் 30 சதவீத உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது, இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கும்பமேளா நிகழ்ச்சியையும் 5 மாநில தேர்தலையும் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it