Theme Check

காதலியை பிரிந்த எலான் மஸ்க் - காரணம் இதுதானாம்..!

காதலியை பிரிந்த எலான் மஸ்க் - காரணம் இதுதானாம்..!

காதலியை பிரிந்த எலான் மஸ்க் - காரணம் இதுதானாம்..!
X

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், தனது காதலி கிரிம்ஸை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதை உறுதிப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க், “நானும் என்னுடைய காதலியும் கிட்டத்தட்ட பிரிந்துவிட்டோம். ஆனால், அவருடன் நல்ல உறவே தொடர்கிறது. அவருடன் சேர்ந்து எங்களுடைய ஒரு வயது ஆண் குழந்தையை வளர்க்க உள்ளேன். இன்னும், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து கொண்டுதான் இருக்கிறோம். எங்கள் இருவருக்கிடையே சிறப்பான உறவு இருக்கிறது.

எலன்

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களில் பணிச்சுமை நிலவுவதால் டெக்சாஸ் நகரில் தான் பெரும்பாலான நேரத்தை கழிக்கிறேன். வெளிநாடுகளுக்கு செல்கிறேன். என்னுடைய காதலி லாஸ் ஏஞ்சல்ஸில் வேலை செய்கிறார். தற்போது, அவர் என்னுடன் தான் வசித்து வருகிறார். எங்கள் அறைக்கு அருகே குழந்தையின் அறை உள்ளது” என்றார்.

இந்த மாத தொடக்கத்தில் மெட் காலா நிகழ்ச்சிக்கு இருவரும் ஒன்றாக சென்றிருந்தனர். ஆனால், சிவப்பு கம்பளத்தில் கிரிம்ஸ் தனியாக நடந்து சென்றார். பின்னர், நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்திற்குள் தான் இருவரும் சேர்ந்தனர். அதேபோல், கடந்த வார இறுதியில், கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனஹன் நடத்திய விருந்தில் எலான் மஸ்க் தனியாக கலந்து கொண்டார்.

மஸ்க், கிரிம்ஸ் ஆகியோர் டேட்டிங் செய்வதாக கடந்த 2018ம் ஆண்டு மே மாதம், முதல் முறையாக செய்தி வெளியானது.

Tags:
Next Story
Share it