இந்தியாவின் பணக்கார கிராமம் இதுதான்.. கோடிகளில் டெபாசிட் செய்யும் என்.ஆர்.ஐ.க்கள் !
இந்தியாவின் பணக்கார கிராமம் இதுதான்.. கோடிகளில் டெபாசிட் செய்யும் என்.ஆர்.ஐ.க்கள் !

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் மாதாபர் என்ற கிராமத்தில் 7,600 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராம வாசிகளில் பெரும்பாலும் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்பவர்களாக இருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஒருவராவது வெளிநாடுகளில் வசிப்பவர்களாக இருக்கின்றனர்.
இதனால் அக்கிராமம் அப்பகுதிகளில் சற்று வசதியான குடும்பங்களைச் சேர்ந்த கிராமம் என்றே கூறலாம். இந்நிலையில் வெளிநாடுகளில் வசிக்கும் அவர்கள், கிராமத்தில் இருக்கும் வங்கிகள் மூலமாக தங்களது குடும்பத்துக்கு பணம் அனுப்புகின்றனர். அத்துடன், கிராமத்தில் இருக்கும் வங்கிகளிலேயே என்.ஆர்.ஐ., கணக்கு தொடங்கி அதில் தங்களது சேமிப்பையும் பராமரித்து வருகின்றனர்.

இதனால், சுமார் 17 வங்கிகள் இந்த கிராமத்தில் தங்களது கிளைகளை தொடங்கியுள்ளன. அதில், அதில் ரூ.5,000 கோடிக்கும் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கிராம மக்கள் ஒவ்வொருவரின் சராசரி வங்கி டெபாசிட் விகிதம் ரூ.15 லட்சமாகவும் இருக்கிறது. எனவே, இந்தியாவின் பணக்கார கிராமமாக மாதாபர் கிராமம் பார்க்கப்படுகிறது. இதனால் அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் இந்த கிராமம் ஈர்த்துள்ளது.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பண்டிகை காலம் என்றால் மறக்காமல் சொந்த கிராமத்துக்கும் வந்து விடுகின்றனர். கிராமத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்கின்றனர். விளைபொருட்களை நகரங்களுக்கு அனுப்பி அவர்கள் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த ஒரு கிராமத்தால் மட்டும் வங்கியில் கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது.
newstm.in

