ஆட்சியும், அதிகாரமும் இதுக்கு தான்.. குஜராத்தில் மோடி பேச்சு..!
ஆட்சியும், அதிகாரமும் இதுக்கு தான்.. குஜராத்தில் மோடி பேச்சு..!

குஜராத்தில், 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய மோடி, “கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டதால்தான் நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேலை செய்வதில்லை; எங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக கடமையாற்றுகிறோம்.
எங்களைப் பொறுத்தவரை ஆட்சியில் இருப்பது, அதிகாரத்தில் இருப்பது என்பது மக்களுக்கு சேவை செய்யத்தான். வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள்தான் எங்கள் அரசின் முன்னுரிமை.
குஜராத் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள அதிக வளர்ச்சி என்பது குஜராத்தின் பெருமை.
கடந்த 8 ஆண்டுகளாக இந்த மாநில மக்களின் நலன்களுக்காகவே அதிக அழுத்தம் கொடுத்து பணியாற்றி வருகிறோம்” என்று கூறினார்.
Next Story

