Theme Check

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
X

‛அண்ணாத்த' திரைப்படத்திற்கு பின் ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். தற்போது இந்தப் படத்திற்கான திரைக்கதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரியங்கா மோகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த் உட்பட நெல்சன் பட நடிகர்கள் இந்தப் படத்திலும் இருக்கிறார்களாம்.

இந்நிலையில் இந்த படத்தின் கதை ஜெயில் தொடர்புடையது என்றும், அதனால் படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்படலாம் என்றும் சில தினங்களுக்கு முன் செய்திகள் வந்தன.

இந்நிலையில், இன்று (17-ம் தேதி) காலை 11 மணிக்கு ரஜினி பட தலைப்பை அறிவித்துள்ளனர். அதன்படி, படத்திற்கு ‛ஜெயிலர்' என பெயரிட்டு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் நீண்ட கத்தி ஒன்றும், அதில் ரத்தம் படிந்தும் காணப்படுகிறது. தற்போது இந்த டைட்டில் போஸ்டர் வைரலாகி வருகிறது.
Image

Tags:
Next Story
Share it