Theme Check

“இதற்காகத்தான் ஒன்றிய அரசை விமர்சிக்கிறார் ஓபிஎஸ்..!” - டி.கே.எஸ்.இளங்கோவன்

“இதற்காகத்தான் ஒன்றிய அரசை விமர்சிக்கிறார் ஓபிஎஸ்..!” - டி.கே.எஸ்.இளங்கோவன்

“இதற்காகத்தான் ஒன்றிய அரசை விமர்சிக்கிறார் ஓபிஎஸ்..!” - டி.கே.எஸ்.இளங்கோவன்
X

விமர்சனம் செய்பவர்களுக்கு அரசாங்கமும் தெரியவில்லை, அரசியலும் தெரியவில்லை, நிதிநிலையும் தெரியவில்லை என்றுதான் சொல்லணும்” என, திமுக செய்தித் தொடர்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.எஸ் இளங்கோவன், “மகனை அமைச்சராக்கும் நோக்கில்தான் ஒன்றிய அரசு என கூறுவதை ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்து வருகிறார். ஒன்றியம் என்பது ஒற்றுமையைக் குறிக்கும் சொல்.

அரசியலமைப்புச் சட்டப்படி ஒன்றிய அரசு என கூறுவதில் தவறில்லை. ஒன்றிய அரசு என்று கூறுவதற்கு ஓபிஎஸ் விமர்சனம் செய்வது பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அவர் மகனை எப்படியாவது அமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.

பெட்ரோல் விலை குறைப்பு, கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையைப் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அப்படி, விமர்சனம் செய்பவர்களுக்கு அரசாங்கமும் தெரியவில்லை, அரசியலும் தெரியவில்லை. நிதிநிலையும் தெரியவில்லை என்று தான் சொல்லணும்.

திமுக அரசு இன்னும் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அவை, நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வில்லை என்றால், விமர்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். திமுக அரசைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றும்.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம். திமுக அரசின் மீது பழி போட வேண்டும் என்ற நோக்கில் தான் பாஜக நீட் தேர்வு விவகாரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.
Tags:
Next Story
Share it