Theme Check

இந்தாண்டு கூட்டம் ரத்து: தமிழக அரசு கூறிய அதே விளக்கம் !

இந்தாண்டு கூட்டம் ரத்து: தமிழக அரசு கூறிய அதே விளக்கம் !

இந்தாண்டு கூட்டம் ரத்து: தமிழக அரசு கூறிய அதே விளக்கம் !
X

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை மறு நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஆண்டுதோறும் குடியரசு நாள், சுதந்திர நாள், தொழிலாளர்கள் நாள் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று அதிமுக அரசு மறுத்தப்போதும் திமுக சார்பில் தனியாக நடத்தப்பட்டது. இதனால் இந்தாண்டு கிராம சபைக்கூட்டம் நடைபெறுமா என எதிர்பார்ப்பு எழுந்தது.
secretariate
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டியிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it