Theme Check

ஜெயலலிதாவிடம் பாசம், மரியாதை இல்லாதவர்கள்.. சசிகலா, டிடிவி குறித்து முன்னாள் அமைச்சர் காட்டம் !

ஜெயலலிதாவிடம் பாசம், மரியாதை இல்லாதவர்கள்.. சசிகலா, டிடிவி குறித்து முன்னாள் அமைச்சர் காட்டம் !

ஜெயலலிதாவிடம் பாசம், மரியாதை இல்லாதவர்கள்.. சசிகலா, டிடிவி குறித்து முன்னாள் அமைச்சர் காட்டம் !
X

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்படி பழனிசாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். அதேநேரத்தில் ஜெயலலிதா நினைவு நாளில் எடப்பாடி பழனிசாமி கார் மீது கற்கள், செருப்பு வீசப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையில் அதிமுக பாராளுமன்ற, சட்டமன்ற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து உள்ளது.

இதன்மூலம் அதிமுகவில் இனி இரட்டை தலைமை தான் என்பதனை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்காக கட்சியில் சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டு உள்ளது என்றார்.

kadampur raju

பின்னர் சசிகலா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவர்களா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வருவது நடக்காத காரியம். சென்னையில் ஜெயலலிதா நினைவு இடத்தில் நேற்று அநாகரீகமான வகையில் நடந்து கொண்டனர். இதன்மூலம் அதிமுக ஒட்டும் கிடையாது. உறவும் கிடையாது என்ற நிலைப்பாட்டை அவர்களே எடுத்துக்கொண்டனர்.

ஜெயலலிதா நினைவு நாளை துக்க நாளாக அனுசரிக்க வேண்டிய நேரத்தில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவிடம் பாசம் இல்லாதவர்கள், மரியாதை இல்லாதவர்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். என்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட டிடிவி தினகரனை, கடம்பூர் ராஜூ தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it