இந்தியாவுக்கு அச்சுறுத்தலா ? உளவு பார்க்கும் மீன் !
இந்தியாவுக்கு அச்சுறுத்தலா ? உளவு பார்க்கும் மீன் !

உலகம் முழுவதும் பரந்து விரிந்த வர்த்தகத்தில் கொடி கட்டி பறப்பதில் சீனா தான் முதன்மையாக உள்ளது. ஆனால் அந்த சீனாவால் பல நாடுகளுக்கு தலைவலி என்பதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக அண்டை நாடுகளுக்கு தொல்லை கொடுப்பதில் சீனர்களுக்கு தான் முதன்மை இடம். பக்கத்து நாடுகளின் ராணுவ ரகசியங்களை உளவு பார்ப்பது, பாரம்பரியங்களை சிதைப்பது போன்றவற்றை எளிதாக கையாளுவர்.
இதற்கெல்லாம் ராணுவத்தையும் பெரும் படையையோ அவர்கள் பயன்படுத்துவதில்லை. ஒரு சிறிய பொம்மை போது இந்த சீனர்களுக்கு. அந்த வகையில், குட்டி விமானத்துக்கு பதிலாக, மீன் வடிவிலான ட்ரோனை தயார் செய்துள்ளனர்.

இந்த மீனின் கண் மற்றும் வாய் இருக்கும் இடங்களில் சக்திவாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீன் போல வளைந்து நெளிந்து, அண்டை நாடுகளின் கடல், நதி உள்ளிட்ட நீர்பரப்பிற்குள் சென்று ஊடுருவுகிறது. பின்னர் அந்த மீனில் இருக்கும் இந்த கருவி துல்லியமாக படம் பிடித்து அதிகாரிகளுக்கு அனுப்பும்.
இந்த செயற்கை மீன் வயிற்றில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி, தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் வரை செயல்படும் என கூறப்படுகிறது.
newstm.in

