Theme Check

அச்சுறுத்தும் கொரோனா.. ஐபிஎல் இந்தியாவில் நடக்குமா? - கங்குலி நெத்தியடி பதில் !!

அச்சுறுத்தும் கொரோனா.. ஐபிஎல் இந்தியாவில் நடக்குமா? - கங்குலி நெத்தியடி பதில் !!

அச்சுறுத்தும் கொரோனா.. ஐபிஎல் இந்தியாவில் நடக்குமா? - கங்குலி நெத்தியடி பதில் !!
X

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் அங்கு வார இறுதி நாட்கள் மற்றும் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் கிழமை காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 ஐ.பி.எல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அடுத்த வாரம் சனிக்கிழமை மும்பை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி நடைபெறுகிறது. சி.எஸ்.கே அணி மோதும் முதல் 5 போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கொரோனா தீவிரமாக பரவுவதால் ஊரடங்கால் ஐ.பி.எல். போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. இதனால் இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். அவர், குறித்த தேதிகளில் போட்டிகள் நடக்கும் என்றும் வீரர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என்றும் உறுதியளித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி வரும் 9ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மும்பை, பெங்களூரு, ஹைதரபாத், கொல்கத்தா அணிகள் விளையாடுகின்றன.


newstm.in

Tags:
Next Story
Share it