அச்சுறுத்தும் ஒமைக்ரான்… 17 பேருக்கு தொற்று உறுதி!!
அச்சுறுத்தும் ஒமைக்ரான்… 17 பேருக்கு தொற்று உறுதி!!

இந்தியாவில் 26 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் மட்டும் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரானை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வெளிநாட்டு விமான பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களில் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதிர்ச்சி தரும் சம்பவமாக மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை தாராவி பகுதியில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் டான்சானியாவில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். அவர் தற்போது செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 3 பேர் மும்பையையும், 4 பேர் பிம்ரி பகுதியையும் சேர்ந்தவர்கள். இந்த 7 பேரில் 4 பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.
இந்த 7 பேரில் யாருக்கும் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. 3 பேருக்கு லேசான அறிகுறி இருந்துள்ளது. ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பது மகாராஷ்டிராவில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

