அச்சுறுத்தும் ஒமைக்ரான்.. இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது !!
அச்சுறுத்தும் ஒமைக்ரான்.. இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது !!

கொரோனா வைரசின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிய போதிலும் இது குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தன. ஆனாலும் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளன. மேலும் ஒமைக்ரான் வகை கொரோனா டெல்டாவை விட ஆபத்தானது என எச்சரித்தனர்.

இதனையொட்டி, ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் உள்ளிட்ட 7 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்குநேரத்தில் மக்கள் அநாவநியமாக வெளியே சுற்றுவதை தவிர்க் வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது. ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 358 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in

