கேரளாவில் நேற்று, 22 மாதக் குழந்தை உட்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் உறுதி..!
கேரளாவில் நேற்று, 22 மாதக் குழந்தை உட்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் உறுதி..!

கேரளாவில் நேற்று, 22 மாதக் குழந்தை உட்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளதாவது; “கேரளாவில் இதுவரை 27 மாதிரிகள் இரண்டு பகுதிகளாக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், 26 மாதிரிகள் நெகட்டிவ் என வந்துள்ளன. 3வது பகுதியாக நேற்று 8 மாதிரிகள் அனுப்பப்பட்டதில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில், 22 மாதக் குழந்தை, 45 வயது நபர் மற்றும் 29 வயது சுகாதாரப் பணியாளர் ஆகியோருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் மொத்தம் 18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிகளிலும், ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனப் பிரிவிலும் பரிசோதனை வசதிகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கோவிட் தொற்று பரவலும், ஜிகா வைரஸ் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கேரளத்துக்கு உதவ மத்திய நிபுணர் குழு அம்மாநிலத்துக்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Next Story

