Theme Check

கோவையில் தங்கியிருக்கும் குண்டர்கள்.. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார் !!

கோவையில் தங்கியிருக்கும் குண்டர்கள்.. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார் !!

கோவையில் தங்கியிருக்கும் குண்டர்கள்.. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார் !!
X

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் முடிந்துள்ள நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே, கோவையில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுப்பதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தலை நியாயமான முறையில் நடத்த வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.

sp velumani

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வெளியூரை சேர்ந்தவர்கள் கோவையில் தங்கி வன்முறையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி அங்குள்ள குண்டர்களை வெளியேற்ற தேர்தல் ஆணையம் நடவடிககை எடுக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி நாளை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

கோவையில் அனைத்து வார்டுகளிலும் போலீஸ் துணையுடன் பரிசுப்பொருள் விநியோகம் செய்யப்படுகிறது. அதிமுகவின் கோட்டையான கோவையை கைப்பற்ற திமுக இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது.

மக்களிடம் திமுக செல்வாக்கை இழந்துள்ளது. அதிமுகவினர் மீது திமுக அரசு பொய்வழக்கு போடுகிறது. திமுகவினர் வெற்றி பெற முடியாத நிலை இருந்த காரணத்தினால் இவ்வாறு அதிமுகவினர் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது, என அவர் கூறினார்.

newstm.in

Next Story
Share it