Theme Check

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அலர்ட் !!

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அலர்ட் !!

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அலர்ட் !!
X

தமிழகத்தில் அரசியல் பிரச்சாரங்கள் ஓய்ந்தாலும் பொதுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் வெயில் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகாத நிலையில், அனல் காற்று மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

நாளை முதல் அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் 13ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் இரு தினங்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it