சினிமாவில் நடிக்கிறாரா டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து..?

சினிமாவில் நடிக்கிறாரா டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து..?

சினிமாவில் நடிக்கிறாரா டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து..?
X

டிக்டாக் பிரபலமான ஜி.பி. முத்து புதுப்படம் படப்பிடிப்பில் இருப்பதாக கூறி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் . இதற்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

எதார்த்தமான தமிழில், நகைச்சுவையாக பேசி டிக்டாக்கில் பிரபலமாக இருந்தவர் ஜி.பி. முத்து. இந்தியாவில் டிக்டாக்குக்கு தடை அறிவிக்கப்பட்டது. அதை நீக்கக்கோரி பிரதமர் மோடிக்கு கோரிக்கைவிடுத்தார் ஜி.பி. முத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சில நாட்களாக எதுவும் செய்யாமல் இருந்த ஜி.பி. முத்து, தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தந்தையுடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த ஜி.பி. முத்து திடீரென தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சை முடிந்த வீடு திரும்பிய நிலையில், தனக்காக பிராத்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் நாளை புதுப்படம் படப்பிடிப்பு என்று குறிப்பிட்டு, வெள்ளை வேட்டி சட்டை மற்றும் காவி துண்டுடன் கூடிய ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ஜி.பி. முத்து. ஆனால் அவர் எந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. எனினும், அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Tags:
Next Story
Share it