Theme Check

டிக்கெட் முன்பதிவு… மாதம் ரூ.80,000 சம்பாதிக்கலாம்!!

டிக்கெட் முன்பதிவு… மாதம் ரூ.80,000 சம்பாதிக்கலாம்!!

டிக்கெட் முன்பதிவு… மாதம் ரூ.80,000 சம்பாதிக்கலாம்!!
X

ஐஆர்சிடிசி உதவியுடன் வீட்டில் இருந்தபடியே மாதம் 80,000 ரூபாய் வரை சம்பாதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏஜெண்ட் வேலைக்கு நீங்கள் IRCTCஇன் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்க முடியும்.

ஐஆர்சிடிசியின் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முகவராக நீங்கள் ஆகிவிட்டால், தட்கல், RAC உள்ளிட்ட அனைத்து வகையான ரயில் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம்.

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் IRCTCயிடம் இருந்து கணிசமான கமிஷனைப் பெறுவீர்கள். நீங்கள் ஏஜென்டாக இருந்து, பயணிகளுக்கு ஏசி அல்லாத கோச் டிக்கெட்டை முன்பதிவு செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 கமிஷன் கிடைக்கும்.

money

அதேபோல, ஏசி வகுப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு ரூ.40 கிடைக்கும். இது தவிர, டிக்கெட் விலையில் ஒரு சதவீதமும் உங்களுக்கு வழங்கப்படும். ஐஆர்சிடிசியின் முகவராக மாற, சில கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும்.

ஒரு வருடத்திற்கு ஏஜெண்ட் ஆக ஐஆர்சிடிசி கட்டணம் ரூ.3999 செலுத்த வேண்டும். நீங்கள் இரண்டு வருடங்கள் ஏஜெண்ட் ஆக விரும்பினால் ரூ.6999 செலுத்த வேண்டும். இது தவிர ஒரு மாதத்தில் 100 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஒரு ஏஜெண்டுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.

railways1

அதேபோல, ஒரு மாதத்தில் 101 முதல் 300 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய டிக்கெட் ஒன்றுக்குரூ.8 கட்டணம். 300 டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்ய டிக்கெட் கட்டணமாக ரூ.5 செலுத்த வேண்டும்.

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு வரம்பு இல்லை. ஒரு மாதத்தில் எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம். இது தவிர, தட்கல் டிக்கெட்டுகளை 15 நிமிடங்களில் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

newstm.in

Next Story
Share it