காரில் சிறுமி கடத்தப்பட்டதை காட்டிக்கொடுத்த டிக்டாக்.. வைரல் வீடியோ !!
காரில் சிறுமி கடத்தப்பட்டதை காட்டிக்கொடுத்த டிக்டாக்.. வைரல் வீடியோ !!

காரில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமி டிக்டாக் வீடியோ உதவியுடன் போலீசார் மீட்டுள்ளனர். இந்த செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் வட கரோலினாவில் 16 வயது சிறுமியை ஒரு கும்பல் காரில் கடத்தியுள்ளது. மிரட்டப்பபட்டு தன்னை கடத்தியவருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது கை சைகைகளைப் பயன்படுத்தி உதவிக்கு சைகை காட்டினாள். சிறுமி கையால் சைகையை பார்த்த நூற்றுக்கணக்கானோரில் ஒருவர் மட்டும் அதனை உற்று கவனித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, அவர் மீட்கப்பட்டார்.

தற்போது சிறுமியை காப்பாற்ற உதவிய நபருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அதாவது, வாகனத்தில் ஒரு பெண் பயணி போல் இருந்த சிறுமி, கை சைகை செய்வதை கவனித்தார். வீட்டில் வன்முறையைப் பிரதிநிதித்துவப்படுத்த சமூக ஊடக தளமான "டிக் டாக்" எனக்கு குடும்ப வன்முறைக்கு என்ற நிலையில் தனக்கு உதவி தேவை என்பது போல் அச்சிறுமி சைகை செய்துள்ளார். மேலும், வாகனத்தை ஒரு ஆண் ஓட்டுவதாக புகார்தாரர் குறிப்பிட்டார்.
16 வயதான பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கும் கடத்தப்பட்ட நபருடன் பழக்கம் இருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு உறவினர்கள் இருந்த வட கரோலினா, டென்னசி, கென்டக்கி மற்றும் ஓஹியோ வழியாக பயணம் செய்ததாகவும் கூறினார். பின்னர் சிறுமி மீட்கப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.
டிக்டாக் கை சைகை என்றால் என்ன?
சைகை என்பது, அவர்கள் துன்பத்தில் இருக்கும்போது, தங்கள் நிலையை வெளிப்படுத்தாமல், அருகில் உள்ள ஒருவரை எச்சரிக்க விரும்பும்போது ஒருவர் செய்யக்கூடிய ஒரு கை அடையாளமாகும். கனடா பெண்கள் அறக்கட்டளை நீண்டகாலமாக துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளக்கூடியவர்களுக்கு கை சைகையை ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளதாகவும் மகிழ்கின்றனர்.
newstm.in

