டிக்டாக் பிரபலம் குடும்பத்துடன் தலைமறைவு.. போக்சோ வழக்கால் வந்த சிக்கல் !!
டிக்டாக் பிரபலம் குடும்பத்துடன் தலைமறைவு.. போக்சோ வழக்கால் வந்த சிக்கல் !!

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த டிக்டாக் பிரபலமான இளைஞரை மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியைச் சேர்ந்தவர் ரீஜன் (20). இவர், நாகர்கோவில் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது சகோதரியும் கல்லூரி மாணவி என்பதால், அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாலை நேரங்களில் வீட்டில் டியூஷன் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், சகோதரிகளான இரு சிறுமிகள், கல்லூரி மாணவியிடம் டியூஷன் படித்து வந்துள்ளனர். இதில் 6 வயது சிறுமியை ரீஜன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. சில நாட்கள் தொடர்ந்து இந்த கொடூரம் நடந்ததால், இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமிக்கு ரீஜன் பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்தனர். இதனையடுத்து ரீஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், இதனையறிந்த ரீஜனும் அவரது குடும்பத்தாரும் தலைமறைவான நிலையில், போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இளைஞர் ரீஜன் அந்த பகுதியில் டிக்டாக் பிரபலமாக அறியப்படுகிறார். டிக்டாக் இருந்த காலத்தில் ஏராளமான டிக்டாக் வீடியோக்களை செய்து வெளியிட்டு அப்பகுதியில் சில பிரபலமானவர் ஆவார். டிக்டாக் இல்லாத தற்போதும் இதுபோன்று பல வீடியோக்களை தயார் செய்து வெளியிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவரால் குடும்பத்தினரும் தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது.
newstm.in

