Theme Check

திரெளபதி முர்மு எனது பெயர் அல்ல.. ஜனாதிபதி பேட்டி..!

திரெளபதி முர்மு எனது பெயர் அல்ல.. ஜனாதிபதி பேட்டி..!

திரெளபதி முர்மு எனது பெயர் அல்ல.. ஜனாதிபதி பேட்டி..!
X

இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டிருக்கும் ஒடிசாவைச் சேர்ந்த திரௌபதி முர்மு, தனது உண்மையான பெயர் திரௌபதி அல்ல என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தனது உண்மையான பெயர் திரௌபதி அல்ல என்றும், தனது பள்ளி ஆசிரியர் தான் இந்தப் பெயரை சூட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மகாபாரத புராணக் கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்டிருக்கும் திரௌபதி, இது தன்னுடைய உண்மையான பெயர் அல்ல என்று கூறியிருப்பதோடு, பிறந்தபோது சந்தாலி கலாச்சாரப்படி தனக்கிட்ட பெயர் 'புதி' என்றும், நன்மை நடக்கும் என்று கூறி, திரௌபதி என்ற பெயரை தனது ஆசிரியர்தான் தனக்கு சூட்டியதாகவும் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

அந்த ஆசிரியருக்கு எனது 'புதி' என்ற பெயர் பிடிக்கவில்லை. அதனால், நன்மை நடக்கும் என்று கூறி தனது பெயரை ஆசிரியர் மாற்றியதாகவும் அதன்பிறகு, அது துரோபதி, தோர்பதி என பல எழுத்து மாற்றங்களைக் கண்டதாகவும் குறிப்பிடுகிறார்.

அதோடு, சந்தாலி கலாசாரப்படி, ஒரு பெண் பிறந்தால் அவருக்கு பாட்டியின் பெயரும், மகன் பிறந்தால் தாத்தாவின் பெயரும் சூட்டப்படுவது வழக்கம் என்றும் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

Next Story
Share it