பக்தர்கள் எதிர்பார்க்கும் திருப்பதி பிரம்மோற்சவம்: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம் !!
பக்தர்கள் எதிர்பார்க்கும் திருப்பதி பிரம்மோற்சவம்: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம் !!

புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மூலவர் ஏழுமலையானையும் உற்சவர் மலையப்பசுவாமி மாட வீதிகளில் உலா வருவதையும் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், புரட்டாசி மாத பிரம்மோற்சவம் விழாவையொட்டி, நாளை(அக்.7) கொடியேற்றம் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு வராஹசுவாமி விருந்தினர் மாளிகையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் இருந்து வனத்துறை அலுவலர் சீனிவாசு ரெட்டி மற்றும் ஊழியர்களால் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

பின்னர், கோவிலின் ரங்கநாய்குலா மண்டபத்தில் சேஷவாகனத்தின் மீது பாய் மற்றும் கயிறு வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வன ஊழியர்கள் வடமலை பேட்டையை சுற்றியுள்ள வயல்களில் வளரும் இந்த தர்பையை சேகரித்து திருமலைக்கு கொண்டுவந்து வெயிலில் ஒருவாரம் உலர வைத்து, சுத்தம் செய்து பாய் மற்றும் கயிறாக தயாரிக்கிறார்கள்.
இதனிடையே, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. எனினும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது உள்ள நடைமுறையே தொடரும் என தெரிவிக்கப்பட்டடுள்ளது.
newstm.in

