காஷ்மீரில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ! தேவஸ்தான தலைவர் தகவல் !!
காஷ்மீரில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ! தேவஸ்தான தலைவர் தகவல் !!

காஷ்மீரில் திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவில் கட்டப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலை பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயில் என பக்தியுடன் அழைக்கின்றனர். ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் மூலவர் வெங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் பத்மாவதி அம்மையார்.
இங்குள்ள வெங்கடாத்ரி மலை 3,200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் கொண்டதாகும். இத்தலத்தில் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. முடி செலுத்துவது பக்தர்களின் வேண்டுதல்களில் பிரதானமான நேரத்திக்கடனாக உள்ளது.இத்தலம் இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட கோயிலாக விளங்கி வருகிறது.

இதனிடையே, ஏழுமலையானுக்கு மும்பை, ரிஷிகேஷ், குருஷேத்திரம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் கோயில் கட்டப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏழுமலையானுக்கு கோயில் கட்டும் பணிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. சென்னையில் கோயில் கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில், இது தொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளற்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு விவேகானந்தா கேந்திர நிறுவனம் மேலும் 2 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்த இடத்தில் திருமண மண்டபம் மற்றும் கோசாலை மடம் கட்டப்டப உள்ளது.
மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தி பஜனை, பகவத்கீதை சொற்பொழிவு மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான 10 ஏக்கர் நிலம் அம்மாநில அரசு வழங்கியுள்ளது. விரைவில் திருக்கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றார்.

