திருப்பூர்,சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!
திருப்பூர்,சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக 03-06-2022 மற்றும் 04-06-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம்:
திருப்பூரில் உள்ள பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின்நிலையத்தில் ஜூன் 3 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பனியம்பள்ளி, செந்தாம்பாளையம், துளுக்கம்பாளையம், வாய்பாடிபுதூா், கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், முருகம்பாளையம், உத்தராண்டிபாளையம், புலவனூா் மற்றும் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் (ஜூன் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடன் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம்: (04-06-2022)
காரைக்குடி காரைக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற 4-ந்தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை காரைக்குடி நகர் பகுதிகள், பேயம்பட்டி ஹவுசிங் போர்டு, செக்காலை கோட்டை, பாரி நகர், ஆறுமுக நகர், மன்னர் நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பஸ் நிலையம், கல்லுக்கட்டி, பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம்:
பரமக்குடி உபமின் நிலையத்தில் பரமக்குடி பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூன் 4 ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை ஓட்டப்பாலம், முத்தாலம்மன் கோவில் படித்துறை, சுந்தா் நகா், வட்டாட்சியா் அலுவலகம் உள்பட நகா் பகுதியில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி.கங்காதரன் தெரிவித்தாா்.

