Theme Check

இன்று மற்றும் நாளை பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும்...!!

இன்று மற்றும் நாளை பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும்...!!

இன்று மற்றும் நாளை பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும்...!!
X

கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு அறிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கும்போது, பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில பாட புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும். இந்த முறை அப்படி இல்லாமல், அனைத்து பாட புத்தகங்களையும் முழுவதுமாக வழங்குவதற்கு பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இதனால், பள்ளி துவங்கும் முதல் நாளிலேயே பாட புத்தகங்களை வழங்க பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளையும் முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது.

Next Story
Share it