Theme Check

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! எங்கு தெரியுமா..?

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! எங்கு தெரியுமா..?

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! எங்கு தெரியுமா..?
X

தென் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலும் ஒன்று. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய தலமும் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆனிப்பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனித் திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெறும்.

school

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆனித் தேரோட்டம் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு பெரும் எதிர் பார்ப்புக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் இம்மாதம் 11-ம் தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Local-holiday

இந்த விடுமுறை நாளில் பள்ளி மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால் அவர்களுக்கு தேர்வு நடைபெறும். அதனால் அத்தைகைய பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்ய ஈடு செய்யும் வகையில் 23-ம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

Next Story
Share it