Theme Check

இன்று சர்வதேச யோகா தினம்.. சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் பிரதமர் உரை !!

இன்று சர்வதேச யோகா தினம்.. சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் பிரதமர் உரை !!

இன்று சர்வதேச யோகா தினம்.. சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் பிரதமர் உரை !!
X

சா்வதேச யோகா தின நிகழ்வுகள் கொரோனா கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டு தொலைக்காட்சி நிகழ்வாக ஒளிபரப்பப்படும் என்பதோடு, அதில் பிரதமா் மோடியின்உரை முக்கிய இடம்பெறும் என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சா்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், 7ஆவது சா்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா தின நிகழ்வுகள் அனைத்து தூா்தா்ஷன் சேனல்களிலும் காலை 6.30 மணி முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் பிரதமரின் உரை முக்கிய இடம்பெறும். காலை 7 மணி முதல் 7.45 மணி வரை பிரதமா் உரை நிகழ்த்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, ஆயுஷ் இணையமைச்சா் கிரண் ரிஜிஜு உரையும் இடம்பெற உள்ளதோடு, மொராா்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் சாா்பில் நேரலையில் யோகா பயிற்சிகளும் செய்து காட்டப்பட உள்ளன. இந்த தகவல்கள் ஆயுஷ் அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘உடல்நலனுக்கு யோகா’ என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு சா்வதேச யோகா தினம் கடைப்படிக்கப்படுகிறது என்று ஆயுஷ் அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 190 நாடுகளில் சா்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


newstm.in


Tags:
Next Story
Share it