Theme Check

இன்று முதல் வாரம் இரு நாட்கள் விடுமுறை! 1,14,000 ஊழியர்கள் பலனடைவார்கள்!

இன்று முதல் வாரம் இரு நாட்கள் விடுமுறை! 1,14,000 ஊழியர்கள் பலனடைவார்கள்!

இன்று முதல் வாரம் இரு நாட்கள் விடுமுறை! 1,14,000 ஊழியர்கள் பலனடைவார்கள்!
X

எல்ஐசி ஊழியர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அவர்களது ஊதியமும் உயர்த்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

எல்ஐசி ஊழியர்கள் சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு நற்செய்தியாக அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

மே 10 முதல் எல்.ஐ.சியின் அனைத்து அலுவலகங்களும் திங்கள் முதல் வெள்ளி வரை வேலை செய்யும் என்று அனைத்து பாலிசிதாரர்களுக்கும் பிற பங்குதாரர்களுக்கும் தெரிவிக்கப்படுவதாக எல்ஐசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சியின் இந்த முடிவால் 1.14 லட்சம் ஊழியர்கள் பலனடைவார்கள்.

மேலும் கூடுதல் மகிழ்ச்சியாக எல்ஐசி ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊதியத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஊதிய உயர்வு 15 முதல் 16% அல்லது 20% வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு ஏற்ப எல்.ஐ.சியின் ஊதிய உயர்வும் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:
Next Story
Share it