விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி...!!
விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி...!!

சென்னையில், விளையாட்டில் வீர, தீர செயல் புரிந்த பெண்கள், 'கல்பனா சாவ்லா' விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, தாங்கள் சார்ந்த துறையில் வீர, தீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான விருதிற்கு, விளையாட்டில் வீர, தீர செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிந்த பெண்கள் தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், 30 கிழக்கு கிளப் சாலை, ஷெனாய் நகர் நீச்சல் குளம், ஷெனாய் நகர், சென்னை - 600030 என்ற முகவரிக்கு இன்று மாலைக்குள் அனுப்ப வேண்டும்.
இதற்கு சுய விவரம், புகைப்படம், பத்திரிகை செய்தி, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் சாதனை விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை, நான்கு புத்தகங்களாக தயார் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் தகவலை, சென்னை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.

