Theme Check

இன்று தான் கடைசி...பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி.. எளிய வழிமுறைகள் ?

இன்று தான் கடைசி...பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி.. எளிய வழிமுறைகள் ?

இன்று தான் கடைசி...பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி.. எளிய வழிமுறைகள் ?
X

ஆதார் கார்டையும் பான் கார்டையும் 2020 மார்ச் 31க்குள் இணைக்காவிட்டால், அவரின் பான் எண்ணை வருமான வரித்துறை செயலிழக்கச் செய்துவிடும் (Deactivate). எப்போது அவர் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைக்கிறாரோ அப்போதுதான் அவரின் பான் எண் செயல்படுத்தப்படும் (Activate).

ஆன்லைனில் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பது எப்படி

  • முதலில் ஆன்லைனில் www.incometaxindiaefiling.gov.in என்ற வருமான வரித்துறை இணையதளத்தைத் திறக்கவும்.
  • அதன் முகப்புப்பக்கத்தில் இடது ஓரத்தில் `Link Aadhaar' என்ற மெனுவைக் காணலாம். அந்த மெனுவைக் கிளிக் செய்யவும். அதற்கான பக்கம் திறக்கும்.
  • அதில் பான் கார்டு எண் கேட்கப்பட்டிருக்கும். உங்கள் பான் கார்டு எண்ணைப் பதியவும். அடுத்து ஆதார் எண் கேட்கப்பட்டிருக்கும். அதையும் பதியவும். அடுத்து, ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்கள் பெயரைப் பதியவும். அடுத்து ஒரு கிளிக் பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • உங்களுடைய ஆதார் கார்டில் மட்டுமே பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த பட்டனைக் கிளிக் செய்யவும். அதார் எண்ணையும் பான் கார்டையும் இணைப்பதற்கான அனைத்து விவரங்களையும் கொடுத்தாயிற்று.

  • அடுத்ததாக, வழக்கம்போல் `கேப்சா கோட்' செக்கிங் வைத்திருப்பார்கள். அதைச் சரியாகக் கொடுத்ததும் `Link Aadhaar' பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • கொடுத்துள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், வெற்றிகரமாக ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கப்பட்டதாகச் செய்தி வரும்.

மொபைல் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம்:

  • மொபைல் எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண் பான் எண் இணைக்கலாம். இதற்காக நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். சரி இதை எப்படி செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
Tags:
Next Story
Share it