மக்களே இன்று தங்கம் வாங்க சரியான நேரம்.. சவரனுக்கு அதிரடியாக 504 ரூபாய் குறைந்தது..!!
மக்களே இன்று தங்கம் வாங்க சரியான நேரம்.. சவரனுக்கு அதிரடியாக 504 ரூபாய் குறைந்தது..!!

கொரோனா பரவல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதும், வெள்ளியின் மீதும் முதலீடு செய்கின்றனர். இதனால் சில்லறை விலையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புது உச்சத்தை அடைகிறது.இனி தங்கம் வாங்குவது கனவில் மட்டுமே நிறைவேறும் என்று நடுத்தர மக்கள் கவலையில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 504 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.36,592 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.63 ஆக குறைந்து, ரூ.4,574 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.நேற்று மாலை இதன் விலை ரூ. 4637ஆக இருந்தது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 68,500 ரூபாயாக இருந்த நிலையில் இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து ரூ.67,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story

