Theme Check

இன்றோடு வீட்டுக்குக் கிளம்பும் 92,000 ஊழியர்கள்

பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள் இன்றுடன் "விருப்ப ஓய்வு" பெறுகின்றனர். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் சுமார் 78,569 பேரும் எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 14,378 பேரும் ஓய்வுக்கான விருப்பத்தைத் தெரிவித்தனர்.

இன்றோடு வீட்டுக்குக் கிளம்பும் 92,000 ஊழியர்கள்
X

பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள் இன்றுடன் "விருப்ப ஓய்வு" பெறுகின்றனர்.

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல் 14,300 கோடி இழப்பு ஏற்ட்டுள்ளது.

வருவாயில் பெரும்பகுதி சம்பளத்துக்கே செல்வதால், நிதிச் சுமையை குறைக்கும் வகையில் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஊழியர்களுக்கு வி.ஆர்.எஸ் திட்டத்தை அரசு கொண்டுவந்தது. பல மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுவந்ததால் இந்த நிறுவனங்களின் எதிர்காலம் பற்றிய அச்சத்தின் காரணமாக அதிகமான ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் சுமார் 78,569 பேரும் எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 14,378 பேரும் ஓய்வுக்கான விருப்பத்தைத் தெரிவித்தனர்.

இன்றோடு வீட்டுக்குக் கிளம்பும் 92,000 ஊழியர்கள்

இவர்கள் அனைவரும் இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இதன் மூலம் பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it