டோக்கியோ ஒலிம்பிக்.. இந்தியாவுக்காக பதக்கத்தைநோக்கி செல்லும் தீபிகா குமாரி !!
டோக்கியோ ஒலிம்பிக்.. இந்தியாவுக்காக பதக்கத்தைநோக்கி செல்லும் தீபிகா குமாரி !!

கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் டோக்கியோ ஒலிம்பிக் தொடங்கி ஓருவாரக்காலமாக போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்தியாவுக்கு வில்வித்தை போட்டியில் அடுத்த பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வில்வித்தை போட்டியில் இன்று ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ரஷ்யாவின் பூடானின் செனியா பெரொவாவை எதிர்கொண்டார்.

தீபிகா குமாரி முதல் செட்டை 28-25 என கைப்பற்றினார். ஆனால் 2-வதுசெட்டை 26-27 என இழந்தார். 3-வது செட்டை 28-27 எனக் கைப்பற்றினார். 4-வது செட் 26-26 என சமனில் முடிந்தது. 5-வது செட்டை 25-28 என இழந்தார்.
இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஷூட் ஆப் பாயிண்ட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. ஷூட் ஆப் பாயிண்ட் முறையில் தீபிகா குமாரி 10 புள்ளிகள் பெற்றார். செனியா பெரோவா 7 புள்ளிகள் பெற்றார். இதன்மூலம் தீபிகா குமாரி 6-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
newstm.in

