Theme Check

டோல்கேட் மாதாந்திர பாஸ் விவகாரம்.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

டோல்கேட் மாதாந்திர பாஸ் விவகாரம்.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

டோல்கேட் மாதாந்திர பாஸ் விவகாரம்.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!
X

சுங்கச்சாவடிகளில் மாதாந்திர கட்டண பாஸ் விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மதுரை, விருதுநகர், திருச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், சாலைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். சுங்கச்சாவடிகள் அவற்றை உறுதிப்படுத்த வேண்டும். சுங்கச்சாவடிகளில் மாத கட்டண சலுகை பாஸ் போன்றவற்றை முறைப்படுத்தப்பட வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, ‘தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மாத கட்டண முறையில் பேருந்துகளுக்கு பாஸ் வழங்குவதில் 50 முறை தான் பயணிக்க வேண்டும் என கட்டுப்படுத்தக் கூடாது.

எத்தனை முறை பேருந்துகள் கடந்து செல்கிறதோ, அதற்கு ஏற்றாற்போல் மாதாந்திர சலுகை கட்டண பாஸ் வழங்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story
Share it