தக்காளி கடும் விலை வீழ்ச்சி... சாலையில் கொட்டி சென்ற விவசாயிகள்: வைரலான வீடியோ!!
தக்காளி கடும் விலை வீழ்ச்சி... சாலையில் கொட்டி சென்ற விவசாயிகள்: வைரலான வீடியோ!!

மராட்டியத்தின் நாசிக், அவுரங்காபாத் சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கர் அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தக்காளி விளைச்சல் அதிகரித்ததால் மொத்த விற்பனை சந்தையில் தக்காளியின் விலை மளமளவென சரிந்துள்ளது.
நாசிக் நகரில் காய்கறி மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ தகாளி விலை 2 முதல் 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி விளைவிக்கும் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடும் விலை வீழ்ச்சியால் நாசிக், அவுரங்காபாத் பகுதிகளில் பயிர் செய்த தக்காளிகளை விவசாயிகள் நேற்று சாலைகளில் கொட்டி சென்றனர்.
சாலைகளில் தக்காளிகளை கொட்டி விவசாயிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், சில பகுதிகளில் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். இதனால் அவை தானாகவே உதிர்ந்து அழுகிவிடுகிறது.
வண்டி வாடகை, ஆள் கூலி உள்ளிட்டவற்றுக்கான செலவுக்கு கூட ஈடாக விற்பனை விலை இல்லாதது விவசாயிகளிடையே வருத்தம் ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.
#WATCH Nashik farmers threw crates of tomatoes on the road yesterday after prices crashed to Rs 2-3 per kg in the wholesale market#Maharashtra pic.twitter.com/SBMqgSGfFH
— ANI (@ANI) August 27, 2021
#WATCH Nashik farmers threw crates of tomatoes on the road yesterday after prices crashed to Rs 2-3 per kg in the wholesale market#Maharashtra pic.twitter.com/SBMqgSGfFH
— ANI (@ANI) August 27, 2021