Theme Check

ஞாபக மறதி அதிகம்.. வாழ்க்கையில் விரக்தி.. மாணவி எடுத்த முடிவு..!

ஞாபக மறதி அதிகம்.. வாழ்க்கையில் விரக்தி.. மாணவி எடுத்த முடிவு..!

ஞாபக மறதி அதிகம்.. வாழ்க்கையில் விரக்தி.. மாணவி எடுத்த முடிவு..!
X

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரவி, டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணியாற்றி வரும் இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி வீட்டில் இருந்த மாணவி ஏதோ ஒரு மாத்திரையை சாப்பிட்டுள்ளார், இதுகுறித்து மாணவியின் தந்தை கேட்டபோது, என்னால் சரிவர படிக்க முடியவில்லை. ஞாபக மறதி அதிகம் இருப்பதால் தனக்கு வாழ பிடிக்கவில்லை எனக் கூறியபடி திடீரென வீட்டின் பின்புறம் ஓடிய மாணவி, மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
ஞாபக மறதியால் சரிவர படிக்க முடியவில்லை' - 11ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத  முடிவு | 11th grade students decision to not read correctly due to memory  loss | Puthiyathalaimurai - Tamil ...
வெப்பம் தாங்காமல் அலறித் துடித்த மகளை அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தள்ளி தீயை அணைத்த தந்தை, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் டி.என்.பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மகளின் உடல்நிலை மோசமானதை அடுத்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
ஞாபக மறதியால் சரிவர படிக்க முடியவில்லை' - 11ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத  முடிவு | 11th grade students decision to not read correctly due to memory  loss | Puthiyathalaimurai - Tamil ...
இச்சம்பவம் குறித்து பங்களாபுதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it