Theme Check

இன்று முதல் அமலுக்கு வரும் முக்கியமான 5 மாற்றங்கள்!!

இன்று முதல் அமலுக்கு வரும் முக்கியமான 5 மாற்றங்கள்!!

இன்று முதல் அமலுக்கு வரும் முக்கியமான 5 மாற்றங்கள்!!
X

அதிகரித்த வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் முதல் கோல்டு ஹால்மார்க்கிங் வரை இன்று சில முக்கியமான பணம் சார்ந்த மாற்றங்கள் நாட்டில் அறிமுகமாகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதன் எக்ஸ்டர்னல் பென்ச்மார்க் லெண்டிங் ரேட்டை (EBLR) 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 7.05 சதவீதமாக உயர்த்தியுள்ளது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் இன்று அமலுக்கு வரும். SBI அதன் குறு செலவு அடிப்படையிலான கடன் (bps) விகிதங்களில் மற்றொரு 10-அடிப்படை புள்ளி உயர்வை அறிவித்துள்ளது.

தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் செமி-அர்பன் / கிராமப்புறங்களில் ஈஸி சேவிங்ஸ் மற்றும் சேலரி ப்ரோகிராம்களுக்கான சராசரி மாத பேலன்ஸ் தேவையை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 அல்லது ரூ. 1 லட்சம் டெர்ம் டெபாசிட் ஆக உயர்த்தியுள்ளது. அதே போல லிபெர்ட்டி சேவிங்ஸ் அக்கவுண்ட்டுக்கான தேவையும் ரூ15,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

axis bank

தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களில் கட்டாய ஹால்மார்க்கிங் நடைமுறை முதல் கட்டமாக இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி நடைமுறை வந்த நிலையில், இதன் இரண்டாம் கட்டம் இன்று நடைமுறைக்கு வருகிறது. தற்போதுள்ள 256 மாவட்டங்கள் மற்றும் 32 புதிய மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் எனேபிள்டு பேமெண்ட் சிஸ்டமிற்கான (AePS) இஷ்யூயர் சார்ஜஸ் (issuer charges) செயல்படுத்தப்பட்டுள்ளதாகஇந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (IPPB) கூறியுள்ளது. இந்த கட்டணங்கள் ஜூன் 15, 2022 முதல் செயல்படுத்தப்படும். மாதத்திற்கு முதல் மூன்று ட்ரான்சேக்ஷன்ஸ் இலவசமாக இருக்கும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வித்ட்ராவல் அல்லது டெபாசிட்க்கு ரூ.20+ஜிஎஸ்டியும், மினி ஸ்டேட்மென்ட் பரிவர்த்தனைக்கு ரூ.5+ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும்.

post 1

புதிய கட்டணங்களின் கீழ், 1000 சிசி முதல் 1500 சிசி வரையிலான இன்ஜின் திறன் கொண்ட தனியார் கார்களுக்கானதேர்ட்-பார்ட்டி மோட்டார் இன்சூரன்ஸ் 2019-20-ல் ரூ.3,221-ல் இருந்து ரூ.3,416-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1500 சிசி-க்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட பெரிய தனியார் வாகனங்கள் பிரீமியமாக ரூ.7,890-ல் இருந்து ரூ.7,897-ஆக இருக்கும்.

இதனிடையே 150 சிசி-க்கு மேற்பட்ட ஆனால் 350 சிசி-க்கு மிகாமல் இரு சக்கர வாகனங்களுக்கு, காப்பீட்டு பிரீமியம் ரூ.1,366-ஆகவும், 350-சிசிக்கு மேற்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2,804 பிரீமியமாகவும் இருக்கும்.

newstm.in

Next Story
Share it