Theme Check

முதன்மையான தலைவர் எம்ஜிஆர்.. பிரதமர் மோடி புகழாரம்..!

முதன்மையான தலைவர் எம்ஜிஆர்.. பிரதமர் மோடி புகழாரம்..!

முதன்மையான தலைவர் எம்ஜிஆர்.. பிரதமர் மோடி புகழாரம்..!
X

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார்.

அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது'' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Next Story
Share it