Theme Check

சிறுமியை கடத்தி காரில் வைத்தே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்..!!

சிறுமியை கடத்தி காரில் வைத்தே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்.. சாலையோர கடையில் மீட்ட போலீஸ்!!

சிறுமியை கடத்தி காரில் வைத்தே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்..!!
X

வீட்டு வேலை செய்து வந்த 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி சென்னை அடையாறில் உள்ள ஒரு இல்லத்தில் தங்கி அங்கு பணிப்பெண்ணாக வேலைசெய்து வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 8 ஆம் தேதி இரவு 10 மணியளவில் வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் வீட்டின் உரிமையாளர் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட அடையாறு காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். மேலும் சிறுமியின் புகைப்படத்துடன் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு பல்வேறு பகுதிகளிலும் ஒட்டினர்.
சிறுமியை கடத்தி காரில் வைத்தே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்..!!இதன்மூலம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அடையாறு காவல்துறையினருக்கு, சிறுமியின் இருப்பிடம் குறித்து தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி பாலவாக்கத்தில் சாலையோரம் உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் பணியாற்றி வந்த சிறுமியை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.
சிறுமியை கடத்தி காரில் வைத்தே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்..!!

அப்போது சிறுமி, தனக்கு சதீஷ் குமார்(24) என்பவருடன் நட்பு இருந்ததாக தெரிவித்துள்ளார். சதீஷ்குமார் ஆசைவார்தைகள் கூறி தன்னை ஆட்டோவில் துரைப்பாக்கத்திற்கு வரவழைத்ததாக தெரிவித்த சிறுமி, அங்கிருந்து சதீஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் வினோத் மற்றும் மஹாராஜா ஆகியோருடன் காரில் அக்கறை கடற்கரைக்கு அழைத்துச் சென்றதாக கூறினாரர். அங்கு வாகனத்தில் வைத்தே 3 பேரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.

சிறுமியை கடத்தி காரில் வைத்தே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்..!!

பின்னர் அங்கேயே விட்டுவிட்டு மூன்று பேரும் புறப்பட்டு சென்றதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாகத் தான் பாலவாக்கத்தில் இருந்த தள்ளுவண்டிக் கடையில் பணியில் சேர்ந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுமியின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் குற்றவாளிகள் சதீஷ் குமார்(24), வினோத்(23) மற்றும் மஹாராஜா(29) ஆகிய 3 பேரையும் பிடித்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்

newstm.in

Tags:
Next Story
Share it