Theme Check

மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை.. சீன ராணுவத்திடம் சிக்கிய சிறுவன் பகீர் தகவல்..!

மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை.. சீன ராணுவத்திடம் சிக்கிய சிறுவன் பகீர் தகவல்..!

மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை.. சீன ராணுவத்திடம் சிக்கிய சிறுவன் பகீர் தகவல்..!
X

அருணாசலப் பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ கிராமத்தைச் சேர்ந்த மிரம் தரோம் (17), ஜானி யாயிங் (27) ஆகிய இருவரும் அருகில் உள்ள துதிங் பகுதிக்கு வேட்டையாடச் சென்றனர்.

சீன எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் வைத்து இருவரையும் சீன ராணுவம் சிறைப்பிடித்தது. ஆனால், இளைஞரான ஜானி யாயிங் அங்கிருந்து தப்பி வந்தார். சிறுவன் மிரம் தரோம் வீடு திரும்பவில்லை. அவனை சீன ராணுவம் கடத்திச்சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மிரம் தரோம் என்ற சிறுவனை 9 நாட்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி இந்திய ராணுவத்திடம் சீன ராணுவம் ஒப்படைத்தது.

இந்நிலையில், சிறுவன் மிரம் தரோம் ‘இந்தியா டுடே’க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தன்னை கட்டி வைத்து மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்ததாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

“அவர்கள் என் கைகளைக் கட்டி, என்னைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். முதல் நாள், அவர்கள் என்னை சித்திரவதை செய்தார்கள்; என் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொடுமை செய்தனர். இரண்டாவது நாளில் இருந்து அவர்கள் என்னை சித்ரவதை செய்யவில்லை.

விலங்கிடப்பட்டு, என் தலையை துணியால் மூடினர். பின்னர் நான் சீன ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன், என்னை அடித்தார்கள், ஆனால், உணவும் தண்ணீரும் கொடுத்தனர்” எனக் கூறியுள்ளார்.

Next Story
Share it