Theme Check

தாஸ்மஹாலில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள் !!

தாஸ்மஹாலில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள் !!

தாஸ்மஹாலில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள் !!
X

இந்தியாவின் அடையாள சின்னங்களில் முக்கியமானவை தாஸ்மஹால். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான தாஸ்மஹால், இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதைப்போல மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தாஸ்மஹால் உள்ளிட்ட பல்வேறு நினைவுச்சின்னங்களும் மூடப்பட்டன.

கொரோனா 2ஆவது அலையின்போது கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மூடப்பட்டன. மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சுமார் 3,700 சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. தற்போது வைரஸ் பரவல் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளதையடுத்து அவைகளை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஸ்மஹால் இன்றுமுதல் திறக்கப்பட்டது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தாஸ்மஹால் திறக்கப்பட்டுள்ளது. தாஸ்மஹாலுக்குள் ஒரேநேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கூடுதல் நபர்கள் தாஸ்மஹாலுக்குள் நுழைய அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் தாஸ்மஹால் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்த வண்ணம் உள்ளனர். .


newstm.in


Tags:
Next Story
Share it